தமிழ்நாடு

புகார்: பாதுகாப்பு கவசம் இன்றி குப்பை அள்ளும் துப்புரவு ஊழியர்கள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புகார்:  பாதுகாப்பு கவசம் இன்றி குப்பை அள்ளும் துப்புரவு ஊழியர்கள்

தாம்பரம் : போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தாம்பரம் நகராட்சியின், துப்புரவு ஊழியர்கள், கைகளில் குப்பையை அகற்றி வருவதாக, புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39 வார்டுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில், இரண்டு தனியார் நிறுவனங்களும், நகராட்சியும் இணைந்து, துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். 427 பேர் துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர்.இவர்களில், 311 பேர், ஒப்பந்த அடிப்படையிலும், 116 பேர் நிரந்தரமாக நகராட்சியாலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதில், தனியார் நிறுவனங்களால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு, கையுறை, ஹெல்மெட், முகக்கவசம் உட்பட, ஆறு விதமான, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த உபகரணங்களை, ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு சரிவர வழங்குவதில்லை என, தெரிகிறது.இதனால், வீடுகள் தோறும் குப்பையை வாங்கும் போதும், தெருக்களில் குப்பையை அகற்றும் போதும் பெரும்பாலும் ஊழியர்கள், கைகளிலேயே குப்பையை அகற்றி வருகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள, துப்புரவு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு, 9.5 லட்சம் ரூபாய் செலவில், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.அவை, ஓரளவிற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் நிறுவனத்தினர், தங்களின் ஊழியர்களுக்கு மாதம், 2 லட்சம் ரூபாயில், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதாக, அதிகாரிகளிடம் கணக்கு காட்டுகின்றனர்.அவற்றை, ஊழியர்களுக்கு வழங்குவதே இல்லை. இதுவே, துப்புரவு ஊழியர்கள் கைகளில் குப்பையை அகற்ற வேண்டிய, அவல நிலை ஏற்படுத்துகிறது.உயர் அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202006:01:25 IST Report Abuse
ஆப்பு தனியாருக்கு வரும் ஒப்பந்தங்களுக்கு கமிஷன் குடுத்தே கட்டுப்படியாகாது. இதுல பாதுகாப்பு உபகரணங்கள் குடுத்தா இழுத்து மூட வேண்டியதுதான். மத்த ஊர்களிலும் இதே அவலம்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X