பராமரிப்பின்றி வீணாகி வரும் பூங்கா வாசகர் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி வீணாகி வரும் பூங்கா வாசகர் புகார்

Added : பிப் 12, 2020
Share
தாம்பரம் : அதிகாரிகளின் மெத்தனத்தால், பராமரிப்பின்றி விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும், கஞ்சா மற்றும் மது விற்பனை கூடமாகவும், நகராட்சி பூங்கா மாறி வருவதாக, புகார் எழுந்துள்ளது. தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, ராஜகோபால் நகர், மூன்றாவது தெருவில், நகராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா உள்ளது.இப்பூங்கா, ஓராண்டிற்கும் மேல் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.

தாம்பரம் : அதிகாரிகளின் மெத்தனத்தால், பராமரிப்பின்றி விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும், கஞ்சா மற்றும் மது விற்பனை கூடமாகவும், நகராட்சி பூங்கா மாறி வருவதாக, புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, ராஜகோபால் நகர், மூன்றாவது தெருவில், நகராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா உள்ளது.இப்பூங்கா, ஓராண்டிற்கும் மேல் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. பூங்காவில் உள்ள, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.பூங்காவிற்குள் புதர்மண்டி காணப்படுவதால், விஷ ஜந்துக்கள் இருக்குமோ என, அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், தங்கள் குழந்தைகளை அங்கு, அழைத்துச் செல்ல அச்சப்படுகின்றனர்.

மேலும், எந்த நேரமும் பூட்டப்படாமல் பூங்கா திறந்தே கிடப்பதால், இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.போதையில் தள்ளாடும் சிலர், அவ்வழியே செல்லும் பெண்களை ஆபாசமாக பேசி, வீண் தகராறில் ஈடுபடுகின்றனர்.இது குறித்து, நம் நாளிதழில், டிச., 10ல் செய்தி வெளியானது. தொடர்ந்து, பூங்காவை சீரமைக்க, ஒப்பந்தம் விடப்பட உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின், வழக்கம்போல் அமைதியாகி விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை, 'கமிஷன்' பணத்திற்காக சேதப்படுத்தி, புதுப்பிக்கும் அதிகாரிகள், பூங்காக்கள் சீரமைப்பு உட்பட, மக்களின் முக்கிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.உயர் அதிகாரிகள் கவனித்து, இப்பூங்காவை சீரமைப்பதுடன், மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்து, அளிக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஆர்.பிரபாகர், 35,சமூக ஆர்வலர்,மேற்கு தாம்பரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X