பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல் போடும் பணி: எம்.எல்.ஏ., பார்வை

Added : பிப் 12, 2020
Advertisement
 போர்வெல் போடும் பணி: எம்.எல்.ஏ., பார்வை

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் போர்வெல் பணியை எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.
மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். குடிநீர் வசதி இல்லாததால், மாணவர்கள் குடிநீர் தேடி அலையும் அவலம் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., போர்வெல் கிணறு அமைக்க என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன்படி, பள்ளி வளாகத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில், மாணவர்களின் குடிநீர் வசதிக்காக போர்வெல் அமைக்கும் பணி நடக்கிறது. இதனை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பர்வையிட்டார். தலைமை ஆசிரியர் கனகசபை, பேரூராட்சி முன்னாள் சேர்மன் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் தாமோதரன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X