எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழக கூட்டுறவு வங்கிகள் அதிக கடன் வழங்க திட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 தமிழக கூட்டுறவு வங்கிகள் அதிக கடன் வழங்க திட்டம்

கூட்டுறவு வங்கிகளில், சிறு வணிகர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவை, மக்களிடம் இருந்து திரட்டப்படும் டிபாசிட், மாநில தலைமை கூட்டுறவு வங்கியிடம் பெறும் கடன்கள் வாயிலாக, சிறு வணிகர்கள், சுய உதவி குழுக்கள், மாற்று திறனாளிகளுக்கு கடன் வழங்குகின்றன.

பூ, காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கும், பெட்டிக்கடை நடத்தும் சிறு வணிகர்களுக்கும், அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் பெறும் வணிகர்கள், தங்களுக்குள், ஒருவருக்கு ஒருவர் பிணையதாரராகவும், கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆளுங்கட்சியாக இருந்தும், 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனால், சிறு தொழில் செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஓட்டுக்களை கவரும் வகையில், சிறு வணிக கடன் பிரிவில், அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X