சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

கடலுார்;லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த நேதாஜி சாலையை சேர்ந்த முரளிகிஷ்ணனை,43: கைது செய்து அவரிமிடருந்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனை செய்த 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.அதே போல் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ரவி, முதுநகர் மணிக்கூண்டு அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த மணக்குப்பத்தை சேர்ந்த ராஜா என்கின்ற மின்னல் ராஜாவை,48: கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் , 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம்விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, ஜங்ஷன் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் ஜங்ஷன் சாலையை சேர்ந்த ராமசாமி மகன் ராமலிங்கம், 57, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X