பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் 'திசை மாறும் பறவைகள்': 'போக்சோ' சட்டத்தில் அதிகரிக்கும் வழக்குகள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement
திசை மாறும் பறவைகள், போக்சோ, அதிகரிக்கும்_வழக்குகள்

கோவை: போக்சோ சட்டத்தில் பதிவாகும் வழக்குகளில், 70 சதவீதம், தவறான நட்பு வட்டத்தால், திசைமாறும் சிறார்கள் சார்ந்ததாகவே இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, நல்வழிப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், தண்டனைகள் கடுமையாக்கி, 2012ல், போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.இதில், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சார்ந்த புகார்கள், பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், இந்த வழக்குகளின் நிலை குறித்து, தொடர்ந்து கண்காணித்து, சமூக பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், 2018ல், 64; வழக்குகளும், 2019ல், 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 70 சதவீத வழக்குகள், தவறான நட்பு வட்டாரத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்ந்ததாகவே இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயது திருமணம், வீட்டை விட்டு வெளியேறுதல், நட்பு வட்டார துாண்டுதலால் தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்வது போன்ற காரணங்களால், பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களே அதிகம்.நடப்பாண்டில், தற்போது வரை, ஆறு புகார்கள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்கள் பதிவாவதன் மூலம், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு, உரிய மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், குடும்ப கவுரவத்தை காரணம் காட்டி, மறைக்கப்படும் புகார்களால், பாதிக்கப்படும் குழந்தைகள், அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதோடு, தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபடுவதாக, மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சுந்தரிடம் கேட்டபோது, ''பள்ளிகளில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகள் புகார் தெரிவிக்க முன்வருகின்றனர். போக்சோ சட்டத்தின் கீழ், பதிவாகும் வழக்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, பெற்றோர் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 2018ல், 64; வழக்குகளும், 2019ல், 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 70 சதவீத வழக்குகள், தவறான நட்பு வட்டாரத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்ந்ததாகவே இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.


பெற்றோரே... கவனம்!

''மொபைல்போன் மூலம் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, பின் திசைமாறும் சிறார்களே அதிகம். சமூக வலைதளங்களில், நல்ல விஷயங்களுக்கு இணையாக, தவறான தகவல்களும் கொட்டி கிடக்கின்றன.எனவே, பள்ளி, கல்லுாரி படிப்பு முடிக்கும் வரை, நட்பு வட்டாரம், சமூக வலைதளங்களில் அவர்களின் பயன்பாடு, போன் பயன்படுத்துவதற்கான தேவை மற்றும் நேரம் குறித்து, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

இதையும் மீறி, வழி மாறும் சிறார்களுக்கு, மனநல ஆலோசனை மிக அவசியம். செய்த தவறை திருத்திக் கொள்வதோடு, தன்னம்பிக்கையுடன் வாழ இது துணைபுரியும்,'' என்கிறார், மனநல ஆலோசகர் மகேஷ்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
12-பிப்-202011:19:05 IST Report Abuse
sathyam 18 வயதுக்கு முன் மகன்/மகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்கும் பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளிகள். சாராயம்-ஸ்மார்ட் போன் ரெண்டும் செய்யும் வேலை ஒன்று தான்.
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
12-பிப்-202020:50:33 IST Report Abuse
Rajesh18 வயசிற்கு பிறகு கெட்டுப் போகலாமா? அப்பன் சாராயம் குடித்தால், பிள்ளைகள் போனினால் நாசமாகிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு தேவை உபதேசம் இல்லை கடுமையான சட்டம், அன்றைக்கு தியேட்டரிலும், கேசட்டில் மறைந்து பார்த்ததை இன்று போனில் மறைந்து [மறைத்து] பார்க்கிறார்கள் அவ்வளவுதான். பார்த்துட்டு சும்மா இருக்கணும், குழந்தயிடமும், அப்பாவி சிறார்களிடமும், பெண்களிடமும் வக்கிரத்தை காட்டினால், ஒரே வாரத்தில் தூக்கு என்று சட்டம் வேண்டும். இது நடக்காது ஏனென்றால் அதிகரித்தால் இருப்பவர்களுக்கும் [அரசியல், அதிகாரிகள், பணபலம் மிக்கவர்கள்] இது பொருந்தும் அதுதான் நம் நாட்டின் சாபக்கேடு புரியுதா????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X