40 எம்.எம். - 11.2.2020| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

40 எம்.எம். - 11.2.2020

Added : பிப் 12, 2020
Share

கவனத்தை ஈர்க்கும் சினி மேக்ஸ்!'நியூஸ் 7 தமிழ் டிவி'யில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், மாலை, 5:30 மணிக்கு, சினிமா சார்ந்த பல்வேறு விஷயங்களுடன் ஒளிபரப்பாகிறது, 'சினி மேக்ஸ் நிகழ்ச்சி!'இதில் இடம்பெறும், வாரம் முழுக்க நடக்கும் கோலிவுட் சார்ந்த விஷயங்களைச் சொல்லும், டாப் 7; மற்ற மொழி சினிமா விஷயங்களை சொல்லும், பி.டி.எம்; அந்தந்த வாரங்களில் வெளியாகும் படங்களின் விமர்சனங்களை தாங்கி வரும், சினிமா போக்கஸ்; கோலிவுட்டில் நடந்த இசை வெளியீட்டு விழாக்கள், சமூக வலைதள நையாண்டிகள் உள்ளிட்டவை, கவனத்தை ஈர்க்கின்றன.ஐஸ்வர்யா, நிவேதிதா மற்றும் ஸ்ரீலேகா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்

-----------இசையை ரசிக்க விரும்புவோருக்கு!'கலைஞர் செய்திகள் டிவி'யில், சனிக்கிழமை தோறும், மாலை, 5:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி, 'மியூசிக் மெட்லி!' மனதின் ஞாபகங்களை மீட்டெடுக்க, கவலைகளை களைய, இசை என்றுமே உதவி செய்யும்.அப்படிப்பட்ட இசையையும், இசைக் கலைஞர்களையும் கொண்டாடி மகிழும் புத்துணர்ச்சியான நிகழ்ச்சியே இது. இசையை ரசிக்க விரும்புவோர் நிச்சயமாக, இந்நிகழ்ச்சியை தவறாமல் காணலாம். நிகழ்ச்சியை, சுமையா தயாரித்து, தொகுத்து வழங்குகிறார்.வரலாற்றில் இன்று என்ன?

மனித இனம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது தான் வரலாறு. சம்பவங்கள் நிறைந்த சரித்திர பாதையில் தான், மனித இனம் பயணித்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வரலாற்றை, நினைவுபடுத்தி கொண்டே தான் இருக்கிறோம். தொலைந்து போன வரலாற்றையும், தேடி கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியே, 'வரலாற்றில் இன்று!' தயாரிப்பாளர் பரத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, தினமும், காலை, 7:30 மணிக்கு, 'சத்தியம் டிவி'யில் ஒளிபரப்பாகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X