பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்கம்

Added : பிப் 12, 2020
Advertisement
 ஆசிரியர் மேம்பாட்டு  பயிற்சி வகுப்பு துவக்கம்

சிதம்பரம்;அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறையில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில், தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஒருவார ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. 'மேட்லேப் அண்டு லேப்வியூ புரோகிராமிங்' என்ற தலைப்பில் 10 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடக்கிறது. தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மின்னியல் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் குழந்தைவேல் பயிற்சியை துவக்கி வைத்தார். பேராசிரியை யமுனா வரவேற்றார். பேராசிரியர் சிவசங்கர் பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து பேசினார். பொறியியல் புலமுதல்வர் ரகுகாந்தன் துவக்கவுரையாற்றினார். உதவி பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் கனிமொழி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X