பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 12, 2020
Advertisement
 எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே.,பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. ஜியோ ஆதித்யா டெக்னாலஜிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி புதனீஷ்வரன் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.இதில் சி.எஸ்.சி., துறையில் இருந்து 4 பேரும், சிவில் துறையில் இருந்து 22 மாணவர்களும் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X