வாசகர் வாய்ஸ்

Added : பிப் 12, 2020
Advertisement

நடக்க விடாத நாய்கள்!

கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பணியாளர்கள் குடியிருக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில், தெருநாய்கள் அதிகரித்துள்ளன. அங்குள்ள குடியிருப்புப்பகுதிகளில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால், அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சமடைகின்றனர்.
தாமஸ்பூங்கா, காஸ்மோபாலிட்டன் கிளப், சாரதாம்பாள் கோவில் அருகே, திட்டசாலை பகுதிகளில் ஏரளாமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. மாநகராட்சி சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் பிடித்து அப்புறப்படுத்தா விட்டால், நடைபயிற்சி மேற்கொள்வோரின் நிலை கவலைதான்.
ராமசாமி, லட்சுமிமில்ஸ்.


விபத்தை குறைக்கலாம்

சலிவன் வீதியிலிருந்து ராஜவீதி செல்லும் பாதையில் ஏராளமான குழி, மேடுகள் நிறைந்து உள்ளன. மிகவும் குறுகிய சாலையில், பேரூர் மார்க்கத்திலிருந்து நகரினுள் நுழையும் பஸ்கள் அனைத்தும் இச்சாலையை கடந்து செல்கின்றன.பஸ்கள், சரக்கு வாகனங்கள் எளிதாக சென்று விடுகின்றன. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மேடு பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. இச்சாலையை சீரமைத்தால் அச்சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கலாம்.
ராஜூ, ராஜவீதி.

பாதை ஒன்று; பயணம் இரண்டு

செட்டிவீதியிலிருந்து சலிவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடையலாம். இப்பாதை ஒருவழிப்பாதை, ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் காந்திபார்க்கிலிருந்து, சலிவன் வீதி வழியாக (ஒருவழிப்பாதையில்) செட்டிவீதிக்கு செல்கின்றனர்.காலை நேரத்தில் பள்ளிக்கு பெற்றோர்கள், குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அவசர அவசரமாக ஒருவழிப் பாதையில் அழைத்துச்செல்லும் போது, விபத்தில் சிக்கி பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ராம்குமார், சலிவன் வீதி.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X