பொது செய்தி

தமிழ்நாடு

விமான அலகு அணிந்து நேர்த்திக்கடன்

Added : பிப் 12, 2020
Advertisement
 விமான அலகு அணிந்து நேர்த்திக்கடன்

விருத்தாசலம்:விருத்தாசலம் செல்லியம்மன் கோவிலுக்கு, பால்குடம், தீச்சட்டி சுமந்து, விமான அலகு அணிந்து கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவில் செடல் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த வாரம் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.நேற்று முக்கிய நிகழ்வாக, பகல் 11:30 மணிக்கு மேல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்தும், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில், விமான அலகு அணிந்த பக்தர்கள் ராட்சத கிரேனில் தொங்கியபடி வந்து, பரவசம் ஏற்படுத்தினர்.தொடர்ந்து, செல்லியம்மனுக்கு சிறப்பு பாலபிேஷகம், ஆராதனை நடந்தது. இதற்காக பக்தர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து வந்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X