தமிழ்நாடு

பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ்கள் இயக்க கோரிக்கை: மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் அவலம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Advertisement
பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ்கள் இயக்க கோரிக்கை: மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் அவலம்

பரங்கிப்பேட்டை:பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக, புதியதாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து சி.முட்லுாரை இணைக்கும் வகையில், வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டு, சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து, பு.முட்லுார் வரை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை வழியாக சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை செல்லும் வழியில் உள்ள சி.முட்லுாரில், அரசு கலைக் கல்லுாரி, வட்டார மோட்டார் வாகன அலுவலகம், சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வணிகவரித்துறை அலுவலகம் மற்றும் தனியார் கல்லுாரி, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. அரசு கல்லுாரியில், புதுச்சத்திரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் கல்லுாரிக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால், பு.முட்லுாரில் இருந்து புறவழிச்சாலை வழியாக, சுமார் 2 கி.மீட்டர் துாரம் கல்லுாரிக்கு நடந்தே வருகின்றனர். இதனால், கால விரையம் ஏற்படுவதுடன், குறித்த நேரத்திற்குள் கல்லுாரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மழைக் காலங்களில், மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான்.மேலும், சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, வழக்கு சம்மந்தமாக கோர்ட்டிற்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து கடலுாருக்கு பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக புதியதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டால் காலவிரையம், பொருட்செலவு மிச்சப்படும். பயணிகளும் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விடுவர். எனவே, பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன்கருதி, கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு, புறவழிச்சாலை வழியாக புதியதாக அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X