கடலுாரில் 16ம் தேதி இருதய சிகிச்சை முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 16ம் தேதி இருதய சிகிச்சை முகாம்

Added : பிப் 12, 2020
Share

புதுச்சேரி:மியாட் மருத்துவமனை நிபுணர்கள் பங்கேற்கும், இருதயவியல் மற்றும் நீரிழிவு நோய் ஆலோசனை முகாம், கடலுாரில் 16ம் தேதி நடக்கிறது.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல், நீரிழிவு மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு சிறப்பு நிபுணர்களின் ஆலோசனை முகாம், கடலுாரில் வரும் 16ம் தேதி நடக்கிறது. ஏ.எல்.சி., வளாகத்தில் உள்ள ஆற்காடு மருத்துவமனையில், காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.இருதய சிகிச்சை நிபுணர்கள் ஜெய்ஷங்கர், விஜித் கே.செரியன், நீரிழிவு நிபுணர் விஜய் பிரசாத் ஆலோசனை வழங்குகின்றனர்.முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம், ஆலோசனை கட்டணம் ரூ.200. முன்பதிவு செய்ய, 04142-230759, 78240 60141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர், முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் கொண்டு வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X