பொது செய்தி

தமிழ்நாடு

சீனாவில் இருந்து கோவை வந்த நால்வர்! 'கொரோனா' பரிசோதனைக்குப் பின் கண்காணிப்பு

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கோவை:சீனாவில் இருந்து கோவை வந்த மேலும் நான்கு பேருக்கு, கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதிக்கப்பட்டது. அவர்கள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, தீவிரமடைந்துள்ள நிலையில் பலர் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

கடந்த வாரம் வரை, 75 பேர் சீனாவில் இருந்து கோவை வந்துள்ளனர். இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து, விமானம் மூலம் மேலும் நான்கு பேர் கோவை வந்தனர்.அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நான்கு பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை புறநகர் பகுதியில் இதுவரை, 45 பேரும், மாநகர பகுதியில், 34 பேரும் சீனாவில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும், அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202015:38:10 IST Report Abuse
Ram Pollachi கண்ணுக்கு தெரியும் திருடன், தீவிரவாதிகளை கண்காணிக்க முடியாதா நீங்கள் அந்த வைரஸ் பத்தி பேசலாமா. இந்தியாவுக்கு அந்நிய செலாவணி கொண்டு வருகிறோம் என்று மார்தட்டுன நீங்கள் வாய் அடைத்து வருகிறீர்கள். ஆ ஜ ஜல்தீ!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X