சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கடலுார்:கடலுாரில் அனைத்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலர் குழந்தைநாதன் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலர் சுந்தரமூர்த்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலர் சம்பந்தம், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சங்க மாவட்ட செயலர் ஆனந்த், ஆலோசகர் வெங்கடேசன், சங்கர், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் அசோகன், மதியழகன் கண்டன உரையாற்றினர்.கடந்த 2019ம் டிசம்பர், 2020 ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும்.பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவைகளை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஜெயராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X