ஒரே அறையில் 4 பேர்; ரேஷன் அரிசியே கதி!

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பலர், ஒற்றை அறை கொண்ட சிறு வீடுகளில், 4 பேர் வரை வசிக்கின்றனர். ரேஷன் அரிசியைத் தான் வாங்கி, புசிக்கின்றனர்.

அன்னுார் தாலுகாவில், ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, ஸ்டீல் ரோலிங் மில், விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும், பல ஆயிரம் தொழிலாளர்களை வரவழைத்து, நிறுவனங்களில் பணியில் அமர்த்தியுள்ளனர்.

நுாற்பாலைகளில், ஒரு சிப்டுக்கு, 300 முதல் 350 ரூபாயும், ஸ்டீல் மில் மற்றும் பவுண்டரிகளில், 400 ரூபாயும் வழங்கப்படுகின்றன. ஒரு சில வட மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், பெரும்பாலானவர்கள், குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இதுகுறித்து கரியாம்பாளையம் தொழிலாளர்கள் கூறியதாவது:குறைந்த சம்பளம் காரணமாக, வடமாநில தொழிலாளர்கள், ஒற்றை அறை உள்ள வீடுகளில் தான் வசிக்கின்றனர். அதிலும் 'பேச்சிலர்'களுக்கு பிரச்னை இல்லை. நான்கு பேர் வாடகையை பிரித்து தருகின்றனர். குடும்பத்துடன் தங்கியுள்ள தொழிலாளர்கள், சிறிய வீட்டுக்கு, 2,000 ரூபாய் வாடகை தந்து, மீதமுள்ள தொகையில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் குறைந்த வாடகைக்கு தங்கியுள்ள வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதையடுத்து திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். எல்லப்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கணேசபுரம் பள்ளிகளில் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் சேர்ந்து படித்து வருகின்றனர்.

சந்தையில் ஒரு கிலோ அரிசி குறைந்தது, 30 ரூபாய்க்கு விற்கப்படுவதால், வீட்டு செலவை குறைக்க, வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை, ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகின்றனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சொந்த ஊருக்கு சென்று வர ஒரு மாத சம்பளம் செலவாகி விடுகிறது.மாத சம்பளத்தில், கணிசமான பகுதியை வீட்டு வாடகைக்கு செலவிடுகின்றனர்.

தமிழக அரசு, தொழிற்சாலைகள் நிறைந்த அன்னுார் தாலுகாவில் குறைந்த வாடகையிலான தொழிலாளர் குடியிருப்புகளை கட்டி தந்தால், வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வெளிமாவட்ட தொழிலாளர்களும் பயன்பெறுவர்.தமிழக குடும்பங்களுக்கு, இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை, வடமாநில தொழிலாளர்களுக்கு, சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்க வேண்டும்.

பிழைப்பிற்காக, 2,000 கி.மீ., தொலைவிலிருந்து வந்து பணிபுரியும் வடமாநில தொழிலாளரின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.இவ்வாறு, கரியாம்பாளையம் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202015:15:41 IST Report Abuse
Ram Pollachi காற்று இல்லாமல் வாழ முடியும், ஆனால் காசு இல்லாமல் வாழ முடியாது. சப்பாத்தியிலிருந்து சாவ்வலுக்கு மாறிவிட்டோம். இங்கே சுய உதவிக்குழு மூலம் பணம் எல்லாத்துக்கும் சுழலுது அது இல்லை என்றால் நம்மவர்கள் வடக்கு நோக்கி போகவேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X