சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்திய இருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement
 சாராயம் கடத்திய இருவர் கைது

கடலுார்:மொபட்டில் சாராயம் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உண்ணாமலைசெட்டி சாவடியில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக மொபட்டில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, 5 மூட்டைகளில் தலா 20 லிட்டர் வீதம் 100 லிட்டர் பாக்கெட் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொபட் ஓட்டி வந்த கடலுார், எம்.புதுாரைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் கருணாகரன், 23; குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம் பழனிசாமி மகன் ராகுல், 20; ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், சாராயம் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.இவற்றின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X