அன்னுார் சாலையில் அவலம் அவதிப்படும் பொதுமக்கள்

Added : பிப் 12, 2020
Advertisement
 அன்னுார் சாலையில் அவலம்  அவதிப்படும் பொதுமக்கள்

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம், அன்னுார் சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய குழிகளை மூடாததால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். மேட்டுப்பாளையம் நகரில், 93 கோடி ரூபாய்க்கு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கண்காணித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் நகரில், பல்வேறு வீதிகளில் தோண்டிய குழிகளுக்கு, கான்கிரீட் சிமென்ட் கலவை போட்டு, சீர் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மேட்டுப்பாளையம் அன்னுார் சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க, மூன்று மாதங்களுக்கு முன்பு, சாலையின் மையத்தில் குழி தோண்டினர். அதில் குழாய்களை பதித்த பின்பு, குழியை சரியாக மூடாமல், அப்படியே விட்டு விட்டனர்.

இதனால் சாலையின் மையப்பகுதியில், பல இடங்களில் அரை அடி ஆழத்திற்கு குழிகள், ஏற்பட்டுள்ளன. இரவு நேரங்களில், இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பலர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் நகரில், பல்வேறு வீதிகளில் உள்ள குழிகளுக்கு, கான்கிரீட் கலவை மூலம், சீர் செய்து வரும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும், அன்னுார் சாலையில் உள்ள குழிகளை, மூடாமல் காலம் கடத்தி வருகின்றனர்.

இச்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில், பலர் கை, கால்கள் உடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு, உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு குழிகளை மூட, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X