பூங்காவில் சமுதாய கூடம் கிராம மக்கள் எதிர்ப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

சூலுார்:கலங்கல் ஊராட்சியில், சிறுவர் பூங்காவை அகற்றிவிட்டு, சமுதாயக்கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சூலுார் அடுத்த கலங்கல் ஊராட்சிக்குட்பட்டது, கே.ஜி.நகர் பகுதி. இங்குள்ள சிறுவர் பூங்காவை அகற்றிவிட்டு, சமுதாயக் கூடம் கட்ட, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறுகையில், 'எங்கள் பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், குடியிருக்கும் மக்களின் நிதி உதவியுடன், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் அந்த பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் தற்போது, பூங்காவை அகற்றிவிட்டு, சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடக்கின்றன. இதனால், விளையாட இடமின்றி, சிறுவர்கள் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சமுதாயக்கூடம் கட்டுவதை நிறுத்த வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X