அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 12, 2020
Share

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இறுதியாண்டு மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லுாரி முதல்வர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரி மற்றும் ஸ்ரீ மார்க் மனிதவள நிறுவனம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில் பிளஸ் 2, பாலிடெக்னிக் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பங்கேற்க வருபவர்கள் சுய விவரப்பட்டியல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் செய்து வருகிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X