பொது செய்தி

தமிழ்நாடு

பழைய கொள்ளிடத்தில் தடுப்பணை: பாண்டியன் எம்.எல்.ஏ., தகவல்

Added : பிப் 12, 2020
Advertisement
 பழைய கொள்ளிடத்தில் தடுப்பணை:  பாண்டியன் எம்.எல்.ஏ., தகவல்

சிதம்பரம்:சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் கருணாநிதி, முன்னாள் சேர்மன் அசோகன், ரவி வாண்டையார் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பட்டை ஒன்றிய பி.டி.ஓ., சிவஞானம் வரவேற்றார். சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் கலந்துகொண்டு 14.16 லட்சம் மதிப்பில் அமைய உள்ள புதிய ஆழ்துளை கிணறு பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், 'சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது கவரப்பட்டு ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்திட வேண்டும் என மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 16.14 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழ்திருக்கழிப்பாலை ஊராட்சியில் 18.92 லட்சம் மதிப்பில் புதிய பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் இடையே தடுப்பணை கட்டிட நில அளவை பணிகள் நடக்கிறது. பழைய கொள்ளிடத்தில் அகரநல்லூரில் ரூ.10 கோடி மதிப்பில் கனிமவள நிதியிலிருந்து ஒரு தடுப்பணையும், பிச்சாவரம் பகுதியில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க ரூ.15 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பெராம்பட்டு - திட்டு காட்டூர் பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது' என்றார். ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணகுமார், பணி மேற்பார்வையாளர் நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X