சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியலை உடைத்து திருட முயற்சி

Added : பிப் 12, 2020
Advertisement
 உண்டியலை உடைத்து திருட முயற்சி

விருத்தாசலம்:விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம், மணவாளநல்லுாரில் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சுவாமி சன்னதி, பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் உண்டியல்கள் உள்ளன.அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரண்டரை மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணுவது வழக்கம். அப்போது, தங்கம், வெள்ளிப்பொருட்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் வரையிலான காணிக்கைகள் இருக்கும். இந்த வாரம் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணப்பட இருந்தது.
இந்நிலையில், கோவிலின் வடக்கு கோபுர வாசலில் இருந்த உண்டியலை, நேற்று முன்தினம் நள்ளிரவு உடைக்கும் சப்தம் கேட்டது. கோவிலின் உள்ளே இருந்த காவலர் வந்து பார்த்தபோது, உண்டியலில் இருந்த பூட்டுகள் உடைந்து கிடந்தன. யாரையும் காணவில்லை.தகவலறிந்த டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், காணிக்கையை திருடாமல் விட்டுச் சென்றுள்ளனர்.கடலுார் தடயவியல் நிபுணர் சுரேஷ் தலைமையிலான குழுவினர், தடயங்களை சேகரித்தனர்.இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் குழப்பம்
கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வதால், உண்டியல்களில் காணிக்கை வசூல் அதிகமாக இருக்கும். அதுபோல், வடக்கு கோபுர வாசல் வழியாக வேப்பூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், உண்டியலில் பூட்டை உடைத்து, அதன் கீழ்பகுதியில் இருந்த கதவை திறந்த மர்ம நபர்கள், அதிலிருந்த காணிக்கை எதுவும் திருடாமல் விட்டுச் சென்றுள்ளனர். இதற்கான காரணம் தெரியாமல் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைவு
புகழ்பெற்ற கோவிலில் மாதந்தோறும் பல லட்சங்கள் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது. அறநிலைத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் தரும், இக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாகவேஉள்ளது.சி.சி.டி.வி., கேமராக்கள் சரிவர செயல்படவில்லை; காவலர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X