சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலை அடிவாரத்தில் ஆண் சடலம் உடல் கூராய்வில் கொலை என தகவல்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, மலை அடிவாரத்தில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் பேரூராட்சி, பாரதி நகரில் நேற்று முன்தினம், ஆண் சடலம் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தது. விசாரணையில், அந்த நபர், கோவை கணபதியை சேர்ந்த சசிகுமார், 46, என தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார், இயற்கை அல்லாத மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உடல் கூராய்வு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று நடந்த உடல் கூராய்வு பரிசோதனையில்,சசிகுமார் தலையில் யாரோ சிலர் தாக்கியதால் ரத்தம் உறைந்து மரணம் சம்பவித்து இருக்கிறது என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். இதில், கொலைசெய்யப் பட்ட சசிகுமார், கணபதி, முதல் வீதியை சேர்ந்த சாமிநாதன், 45, பிரஸ் காலனி, பாலாஜி கார்டன் குழந்தைவேலு, 35, ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தும்போது, பிரச்னை ஏற்பட்டு, அதில் சசிகுமார் சம்பவ இடத்தில் கொலை செய்யப்பட்டார் என, தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவாக உள்ள சாமிநாதன் மற்றும் குழந்தைவேலுவை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X