தமிழ்நாடு

மதுரையில் 'கொரோனா' கண்காணிப்பில் 77 பேர்: வீட்டைவிட்டு வெளியேற சுகாதாரத்துறை தடை

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (3)
Advertisement
மதுரையில் 'கொரோனா' கண்காணிப்பில் 77 பேர்:  வீட்டைவிட்டு வெளியேற சுகாதாரத்துறை தடை

மதுரை:'கொரோனா' வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ள சீனாவில் இருந்து வீடு திரும்பிய மதுரையைச் சேர்ந்த 77 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து 24 நாடுகளுக்கு கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. சீனாவில் நேற்று முன் தினம் மட்டும் 107 பேர் இறந்தனர். தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கும் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு துவங்கியதற்கு பின் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமானோர் திரும்பியது தெரியவந்தது. இவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தர விட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த 77 பேர் வீடு திரும்பினர். இவர்களில் 45 பேர் மதுரை நகரை சேர்ந்தவர்கள்.

77 பேரின் வீடுகளுக்கும் சென்று மாநகராட்சி, மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனினும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் கூறுகையில், '' ஜன.,28 முதல் வீடுகளில் வைத்து கண் காணிக்கிறோம். யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. அனைவருமே சீனாவில் பாதிப்பில்லாத மாகாணங்களில் இருந்து வந்தவர்கள்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan kr - madurai ,இந்தியா
12-பிப்-202015:57:51 IST Report Abuse
kumaresan kr எச்சரிக்கை : மதுரையில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் இறைச்சி கடைகளில் ஆடு , மாடு , கோழி அறுத்து வெளியே தொங்கவிடும் பழக்கம் இன்னும் மாறவில்லை . அரசாங்கம் உடனடியாக இறைச்சி கடைகளில் வெளியில் தெரியாத வாறு இறைச்சி விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் . மதுரை சிந்தாமணி ரோட்டில் அநேக இடங்களில் இறைச்சி கடையில் மாட்டுக்கறி தொங்கவிடப்படுகிறது . ஒருபுறம் கழிவு நீர் கலந்த ஓடை இன்னொரு புறம் திறந்த இறைச்சி கடைகள். சிந்தித்து செயல்படுங்கள் மக்களே மற்றும் இதையெல்லாம் எனக்கென்ன என்று வேடிக்கை பார்க்கும் மதுரை மாநகராட்சியே. நல்ல நல்ல மாற்றங்களை கொண்டு வருவது தான் நிர்வாகம் , வெறுமெனே பார்த்து கொண்டு இருப்பது அல்ல .
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
12-பிப்-202011:34:21 IST Report Abuse
B. இராமச்சந்திரன் "சீனாவில் இருந்து வீடு திரும்பிய மதுரையைச் சேர்ந்த 77 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது." - வேடிக்கையாக உள்ளது, தடையை அவர்கள் பின்பற்றுவார்கள் என்று அதிகாரிகள் நம்புகிறார்களா... அல்லது சுகாதாரத்துறை பணியாளர்கள் 24 மணிநேரமும் அவர்களின் வீட்டில் கண்காணிக்கிறார்களா...
Rate this:
Share this comment
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-202009:06:15 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan what about other district in Tamilnadu , What about Chennai city ? many people admitted in hospital for monitoring from china ..what about result ? government officers take care the monitoring people from china and give awareness to our public people ..avoid the spread this virus in TN..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X