பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள் வரவு

Added : பிப் 12, 2020
Advertisement
 ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள் வரவு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்திலிருந்து தினமும் காலை, 7 :10 மணிக்கு, ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு செல்கிறது. இதில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும், சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே, ஒரு முறை மட்டுமே, மலை ரயில் இயக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த ரயிலில் இடமில்லாமல், ஏமாற்றம் அடைகின்றனர்.அதனால் குன்னுார், ஊட்டி இடையே, மலை ரயில் போக்குவரத்தை பலமுறை இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக மொத்தம், 28 புதிய ரயில் பெட்டிகளை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில், ரயில்வே நிர்வாகம் உற்பத்தி செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக, 8 பெட்டிகள் வந்தன. தற்போது, 7 பெட்டிகள் மேட்டுப்பாளையம் வந்துள்ளன. மேலும் 13 பெட்டிகள் வர உள்ளன. சென்னையிலிருந்து ரயில் பெட்டிகளில், மேட்டுப்பாளையத்துக்கு ஏழு பெட்டிகளை கொண்டு வந்தனர். இப்புதிய பெட்டிகள், ஈரோட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ராட்சத ராஜாளி கிரேன் மூலம், தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டன. ஓரிரு வாரத்தில், வெள்ளோட்டம் மூலம் குன்னுாருக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X