பொது செய்தி

தமிழ்நாடு

தமுக்கம் கூட்டரங்கு முகப்பில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம்

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் மூலம் தமுக்கம் மைதானத்தில் ரூ.45.6 கோடியில் அமைய உள்ள பிரம்மாண்ட கூட்டரங்கின் முகப்பு பகுதிகளில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுர வடிவம் இடம் பெறுகிறது. மதுரையின் அடையாளத்தை பறைசாற்ற இம்முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது.இக்கூட்டரங்கு திட்டத்திற்கு அரசின் நிர்வாக, தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததை தொடர்ந்து டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. 9.68 ஏக்கர் பரப்புள்ள மைதானத்தில் 4.08 ஏக்கரில் கட்டுமானம் அமைகின்றன. 3,500 இருக்கைகளுடன் 4,300 சதுர மீட்டர் பரப்பில் 7 கூட்டரங்குகள், 1,178 சதுர மீட்டர் பரப்பில் உணவுக்கூடம், 215 டூவீலர், 240 கார்களுக்கான வாகன நிறுத்தகம் அமைகிறது. தற்போதுள்ள கட்டடம் இடிக்கப்பட்டு மார்ச்சில் பணி துவங்குகிறது.உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் புகழை பறைசாற்றும் வகையில் கூட்ட அரங்கின் நுழைவு வாயில் பகுதிகளில், இக்கோயில் கோபுரங்களை பொறிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு அடுத்தபடியாக தமுக்கம் மைதான கூட்ட அரங்கிலும் மதுரையின் அடையாளம் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டரங்கு மூலம் ஆண்டுதோறும் ரூ.6.46 கோடி வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி கணித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X