பொது செய்தி

தமிழ்நாடு

திருவேடகம் ஏடகநாதர் கோயில் தெப்பத்திருவிழா

Added : பிப் 12, 2020
Advertisement

சோழவந்தான், பதிருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோயில் பிரம்மதீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு சுவாமி, அம்மனை கோயிலில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் கணேசன்,பரசுராம் பட்டர், சிறப்பு அபிஷேக, தீபாராதனை செய்தனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.பின் சப்பர மின்விளக்கு அலங்காரத்தில் ஏலவார் குழலியம்மன் ஏடக நாதர் சுவாமி பிரம்மதீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் அருள் பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சேவுகன், நிர்வாக அதிகாரி இளஞ்செழியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X