பொது செய்தி

தமிழ்நாடு

லாரிகள் வராததால் நெல் கொள்முதல் நிறுத்தம்

Added : பிப் 12, 2020
Advertisement

மேலுார், மேலுார் தனியா மங்கலத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைகளை ஆலைக்கு கொண்டு செல்ல லாரிகள் வராமல் தேங்கி கிடப் பதால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது.கடந்த ஜன.,31 முதல் இந்நிலையம் செயல்படுகிறது. சருகுவலையபட்டி, கீழவளவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் நெல் வாங்கி லாரிகள் மூலம் கப்பலுார் அரிசி ஆலைக்கு அனுப்புகின்றனர். தற்போது லாரிகள் வராததால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன.விவசாயி பெரியண்ணன்: விவசாயிகளிடம் வாங்கிய நெல் 12 நாட்களாக திறந்தவெளியில் கிடக்கிறது. இடப்பற்றாக்குறையால் நெல் கொள் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வயலில் கதிர் அறுவடை செய்ய வேண்டிய பருவம் தாண்டியும் அறுவடை செய்யாததால் அரிசி உடைந்து குருணையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதால் அதிகாரிகள் உடனடியாக லாரிகள் மூலம் நெல்லை நகர்வு செய்து மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும்.நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் புகாரி கூறுகையில், ''கொள்முதல் நிலையத்தில் நெல் தேக்கம் ஏற்படாதவாறு தீர்வு காணப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X