மாணவியை கழிப்பறை சுத்தம் செய்ய சொல்வதா?

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, அரசு ஆரம்ப பள்ளி மாணவி ஒருவரை கழிவறையை சுத்தப்படுத்த சொன்ன விவகாரம் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

புதுப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர், குமரேஸ்வரி. இவர், இதே பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, அங்கு உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும்படி அடிக்கடி கூறி வந்துள்ளார்.இது குறித்து மாணவி, பெற்றோரிடம் புகார் தெரிவிக்க, மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன் திரண்டு, தலைமை ஆசிரியருக்கு எதிராக அடுக்கடுக்காக புகார் எழுப்பினர்.

இச்சம்பவத்தை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நேரில் வந்து விசாரித்தார். இது குறித்து, வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''விரிவான விசாரணை செய்யப்பட்டது. தலைமையாசிரியை குமரேஸ்வரி விரைவில் இடமாறுதல் செய்யப்படுவார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-பிப்-202017:31:00 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan மாணவர்கள் சுத்தம் செயவதில் தவறில்லை. அவர்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X