பொது செய்தி

தமிழ்நாடு

'கிசான் கடன் அட்டை' வழங்கப்படும்: கலெக்டர் அன்புச்செல்வன் தகவல்

Added : பிப் 12, 2020
Advertisement
 'கிசான் கடன் அட்டை' வழங்கப்படும்:  கலெக்டர் அன்புச்செல்வன் தகவல்

கடலுார்:விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு கடன் பெற கிசான் கடன் அட்டை வழங்கப்படும் என, கலெக்டர் அன்புச்செல்வன் கூறினார்.
இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் 2019-20 ஆண்டிற்கு 7,739 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதன் உப தொழில்களான கால்நடை, மீன், பட்டுபுழு வளர்ப்பு போன்றவற்றிற்கு கிசான் கடன் அட்டை திட்டம் மூலம் எளிதில் கடன் வழங்கப்பட உள்ளது.விவசாயிகளின் சாகுபடி பரப்பிற்கு ஏற்ற வகையில் இடுபொருள் வாங்க தேவையான கடன் உதவியை வங்கி மூலம் பெறுவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும். விவசாயிகள் கணக்குவைத்துள்ள வங்கியில் கடன் அட்டை பெறலாம். பொதுச் சேவை மையங்களிலும் கிசான் கடன் அட்டை பெற விண்ணபிக்கலாம்.உழவர் அட்டை பெற்றுள்ள விவசாயிகள், வங்கியை அணுகி கடன் தொகையின் உச்சவரம்பை அதிகரிக்க விண்ணப்பிக்கலாம். வங்கிகளில் 7 சதவீத வட்டியில் ஏக்கருக்கு 36 ஆயிரம் ரூபாய் வரை, நிலத்திற்கான ஆவணங்களை கொடுத்து நகை கடன் பெற்றுக்கொள்ளலாம்.உழவர் அட்டையை புதுப்பிக்கவும் வங்கியை அணுகலாம். கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டு பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் இதுவரை 1,81,423 லட்சம் விவசாயிகள் சேர்ந்துள்ளனர். இதில் 1,43, 422 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 38,001 விவசாயிகளுக்கும் கிசான் அட்டை வரும் 24ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்படும். கடலுார் மாவட்டத்தில் 107 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 57 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 2000 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகமாகும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 50 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரில், இதுவரை 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, நபார்டு வங்கியின் மாவட்ட வளரச்சி அதிகாரி ஹரிகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், வேளாண் உதவி இயக்குநர் பூவராகவன் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X