சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

பண்ருட்டி:பெண் போலீசாரை வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்த இருவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி போலீஸ் நிலையத்தின் பெண் போலீசாராக பணிபுரிந்து வருபவர் தனவள்ளி,33; இவர் நேற்று மாலை 5:30 மணிக்கு கோர்ட் அலுவல் பணிமுடித்து போலீஸ் நிலையத்திற்கு, பழைய அரசு மருத்துவமனை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது உளுந்துார்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன்,33; விக்னேஷ்,32; ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். தனவள்ளி இருவரையும் தட்டிக்கேட்டார். இதனால் கோபமடைந்த அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தனர். பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து ஜனார்த்தனன்,33; விக்னேஷ்,32; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X