தமிழ்நாடு

பஞ்சில் வேகும் பிஞ்சுகள்; நூற்பாலையில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
பஞ்சில் வேகும் பிஞ்சுகள்; நூற்பாலையில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள்

அன்னுார்: அன்னுார் தாலுகா நுாற்பாலைகளில், நுாற்றுக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை மீட்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது.

அன்னுார் வட்டாரத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், ஜின்னிங் பேக்டரிகள் அதிகம் இருந்தன. நாளடைவில், பெரும்பாலான ஜின்னிங் பேக்டரி உரிமையாளர்கள், பஞ்சு, பருத்தி வியாபாரிகள், நுாற்பாலைகளை துவக்கினர்.அன்னுார் தாலுகாவில் மட்டும் தற்போது, 3,000 ஸ்பிண்டில் திறன் முதல், 50 ஆயிரம் ஸ்பிண்டில் திறன் வரை உள்ள 150 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.

இந்த மில்களில் உற்பத்தியாகும், நுால் தமிழகம், மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பஞ்சாலைகளில், வெளி மாவட்டத்தை சேர்ந்த 5,000 பேர், வெளிமாநிலங்களை சேர்ந்த 8,000 பேர் உள்பட, 20 ஆயிரம் பேருக்கு மேல் பணிபுரிகின்றனர். மில்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மில் நிர்வாகங்கள், தொழிலாளர்களை அழைத்து வந்து சேர்த்து விடுவோருக்கு கமிஷன் தருகின்றன.

மில் வளாகத்தில், மூன்று ஆண்டுகள் தங்கி பணிபுரிபவர்களுக்கு மூன்று வேளை உணவு, இருப்பிடம் தந்து, ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை தரப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான சிறுமியர் வந்து, தங்கி பணிபுரிகின்றனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தில், 14 வயதும் அதற்கு குறைவாகவும் உள்ள சிறுவர், சிறுமியரை எந்த வேலைக்கும் சேர்க்கக்கூடாது. மீறி பணி அமர்த்தினால் அபராதம், சிறை தண்டனை என, அரசு எச்சரிக்கிறது.

15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர், ஆபத்து இல்லாத குறிப்பிட்ட பணிகளில் மட்டும் ஈடுபடுத்தலாம் என, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், அன்னுார் தாலுகாவில், பல ஸ்பின்னிங் மில்களில், 12 முதல் 14 வயது வரையிலான நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் பணிபுரிகின்றனர்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், மில்களில் ஆய்வு செய்வதில்லை. தொழிலாளர்களின் வயதை சோதித்து நடவடிக்கை எடுப்பதில்லை. பல குடும்பத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, பெற்றோரே தங்கள் குழந்தைகளை மில்களில் சேர்த்து விடுகின்றனர். வேறு சிலர் புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, தங்கள் குழந்தைகளை மில்லுக்கு அனுப்பு கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள், ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக, இலவச கட்டாய கல்வி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதில், கட்டணம் செலுத்த தேவையில்லை. கற்றல் பொருட்கள் அனைத்தும் இலவசம்.பணத்திற்காக,தங்கள் குழந்தைகளை தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர் திருந்த வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் பஞ்சாலை நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.


அதிரடியா மீட்கணும்!

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மில்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என, தொழிலாளர் நலத்துறையில் புகார் தெரிவித்தால், மில்லில் ஆய்வு செய்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை. வயது குறைந்த, அனுபவம் இல்லாத சிறுவர், சிறுமியர், வெப்பத்தில் தகிக்கும் நுாற்பாலைகளுக்குள், உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணிபுரிகின்றனர். அனுபவமில்லாத சிறுவர், சிறுமியர் அடிக்கடி தொழிற்சாலை வளாகத்தில் இயந்திரங்களில் சிக்கி காயமடைகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், மில்களில் சோதனை நடத்தி, குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponnusamy - Palladam,இந்தியா
13-பிப்-202010:46:26 IST Report Abuse
Ponnusamy இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் வருங்கால தலைவர்கள், அறிஞர்கள், அறிவியல் மேதைகள். இவர்களை மீட்டு அவர்களின் வாழ்வை நலம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X