பொது செய்தி

தமிழ்நாடு

உறவுகளோடு கூடி வாழவிழாவில் அறிவுரை

Added : பிப் 12, 2020
Advertisement

அன்னுார்:கவையன்புத்துார், தமிழ்ச்சங்க முப்பெரும் விழா, தேவம்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி செயலர் குழந்தைசாமி தலைமை வகித்தார்.

திருப்பூர் மகளிர் கலைக்கல்லுாரி உதவி பேராசிரியை ஈஸ்வரி பேசுகையில், ''பல வீடுகளில் பெற்றோரை முதியோர் காப்பகத்திலும், குழந்தைகளை விடுதிகளிலும் விட்டு விட்டு, தம்பதியர் தனித்து வாழ்கின்றனர். இந்த வாழ்க்கை, ஒரு வாழ்க்கையே அல்ல. உறவுகளோடு வாழ்வது தான் வாழ்க்கை,'' என்றார்.

தொல்காப்பியத்தின் சிறப்பு குறித்து, புலவர் தர்மலிங்கம் பேசினார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி ஆகியோர், விவசாயிகளின் இன்றைய நிலை பற்றி ஆதங்கத்துடன் பேசினர்.பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் உதவி பேராசிரியர் விக்னேசு எழுதிய 'தொல்காப்பிய செல்வம்' என்னும் நுாலை, திருக்குறள் அய்யாசாமி வெளியிட்டார்.

கணேசபுரம், பாரதி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது.பிறமொழி கலக்காமல் துாய தமிழில் பேசும் போட்டியில், 30 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நான்கு பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் சதாசிவம், பழமன், பணி நிறைவு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X