பொது செய்தி

தமிழ்நாடு

வெடிபொருட்கள் சப்ளை: 'சி.ஏ.ஜி.,' குற்றச்சாட்டு

Added : பிப் 12, 2020
Advertisement

புதுடில்லி, 'வெடிமருந்து தொழிற்சாலை வாரியம் தடை விதிக்கப்பட்ட காலத்தில் தயாரித்த 39 கோடி ரூபாய் மதிப்பிலான விமான எதிர்ப்பு வெடிபொருட்களை இந்திய ராணுவம் கொள்முதல் செய்துள்ளது' என 'சி.ஏ.ஜி.' எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2014 நவம்பரில் ஒடிசாவின் கோபால்பூர் விமான படை பயிற்சி மையத்தில் 'கே' எனப்படும் வெடிபொருள் விபத்து நேர்ந்தது. இதையடுத்து அந்த வெடிபொருள் தயாரிப்பை டிசம்பர் முதல் நிறுத்துமாறு வெடி மருந்து தொழிற்சாலை வாரியத்திற்கு ராணுவ தலைமையகம் உத்தரவிட்டிருந்தது.இந்த தடை 'கே' வெடிபொருள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து 2015 செப்.ல் விலக்கிக் கொள்ளப்பட்டது.அப்போது ராணுவ தலைமையகம் 'தடை காலத்தில் தயாரித்த 'கே' வெடிபொருள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' என வெடிமருந்து தொழிற்சாலை வாரியத்திற்கு தெரிவித்திருந்தது.ஆனால் இவ்வாரியம் தடை காலத்தில் அதாவது 2015 ஆகஸ்டில் தயாரித்த39 கோடி ரூபாய் மதிப்பிலான 52 ஆயிரத்து369 'கே' வெடிபொருட்களை ராணுவத்திற்கு சப்ளை செய்துஉள்ளது.பயன்படுத்தாத இந்த வெடிபொருளுக்கு மாற்றாக புதிதாக தயாரிக்கப்படும் வெடிபொருட்களை சப்ளை செய்வதாக கூறி மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் சப்ளை செய்யப்படவில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X