பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம்

Added : பிப் 12, 2020
Advertisement

மங்கலம்பேட்டை:விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், சென்னை, பெங்களூரு, திருப்பதி, ஓசூர், வேலுார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றன. இந்த சாலை போடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், விருத்தாசலம் - மங்கலம்பேட்டை வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.அதை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, நெடுஞ்சாலை துறையினர், விருத்தாசலத்தில் இருந்து மங்கலம்பேட்டை வரை சேதமடைந்த பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் செய்தனர்.இந்த பேட்ஜ் ஒர்க் சரிவர அமைக்கப்படவில்லை. சாலையை விட அதிக தடிமனாக போடப்பட்டுள்ளது. பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும் போதோ, அல்லது வேகமாக பேட்ஜ் ஒர்க் செய்த இடத்தை கடக்கும் போது, வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் 17, 20, 21 ஆகிய தேதிகளில் பைக்கில் சென்ற 6 பேர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். கடந்த 23ம் தேதி விஜயமாநகரம் அருகே பைக்கில் சென்ற இருவர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 26ம் தேதி கோ.பூவனுார் அருகே எதிரெதிரே வந்த பைக் மோதி ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
கடந்த 27 ம் தேதி விஜயமாநகரம் மதுரை வீரன் கோவில் அருகே மூவர், 28 ம் தேதி விஜயமாநகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற இருவர் என 5 பேர் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தனர்.அதேபோல் கடந்த 9ம் தேதி இரவு 11:00 மணியளவில் லாரி மீது அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மங்கலம்பேட்டை - விஜயமாநகரம் இடையே நடந்த சாலை விபத்தில், 2 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையை முழுமையாக சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X