பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிக்கு 'காமராஜர் விருது'

Added : பிப் 12, 2020
Advertisement
 அரசு பள்ளி மாணவிக்கு 'காமராஜர் விருது'

பெ.நா.பாளையம்:சின்ன தடாகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுமித்ராவுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி, விளையாட்டு, பொது சேவையில் அவர்கள் காட்டிய அக்கறை அடிப்படையில், காமராஜர் விருது வழங்கப்படுகிறது.சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ், 1 மாணவி சுமித்ரா, தகுதி அடிப்படையில், காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து பள்ளி ஆசிரியை ஜானகி கூறுகையில்,''மாணவி சுமித்ரா பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும், சாரணர் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி,மாணவிக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்,'' என்றார்.விருதுபெற்ற மாணவிக்கு, பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X