பொது செய்தி

தமிழ்நாடு

'‛சுதேசி பொருட்களை வாங்க வேண்டும்'

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரை, ''இறக்குமதியை குறைத்து நாட்டில் தயாராகும் சுதேசி பொருட்களை வாங்க வழி காட்ட வேண்டும்.,'' என சுதேசி விழிப்புணர்வு இயக்க இணை அமைப்பாளர் அஸ்வின் மகஜன் பேசினார்.மதுரை மடீட்சியாவில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.சுதேசி விழிப்புணர்வு இயக்க இணை அமைப்பாளர் அஸ்வின் மகஜன் பேசியதாவது: சிறு,குறு, நடுத்தர தொழில்களில் என்பதை சிறு,குறு தொழிலாக மாற்ற வேண்டும். நடுத்தர தொழிலில்களில் பெரும் முதலீடுகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்வதால் உள்ளூர் தொழில் வளர்ச்சி குறைந்து வருகிறது. இறக்குமதியை குறைத்து நாட்டில் தயாராகும் சுதேசி பொருட்களை வாங்க வழி காட்ட வேண்டும்.சிறு,குறு தொழில்களுக்கு 5 சதவீதம் என்ற ஒரே விதமான ஜி.எஸ்.டி., வரியை நிர்ணயிக்க வேண்டும். வேளாண் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்து சந்தைப்படுத்தினால் விவசாயிகள் பயன் பெறுவர். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்'' என்றார்.சுதேசி இயக்க அமைப்பாளர் சுந்தரம், மடீட்சியா தலைவர் முருகானந்தம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாநில அமைப்பாளர் ஆதிசேஷன் ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X