பொது செய்தி

தமிழ்நாடு

வீரமாஸ்தி அம்மனுக்கு கும்பாபிஷேக திருவிழா

Added : பிப் 12, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், வீரமாஸ்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியநாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் வீரமாஸ்தி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் அதிகாலை மங்கல இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தீபாராதனை நடந்தன.

தொடர்ந்து, தீர்த்த கலசம் கோவிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால ஹோமம் ஆகியன நடந்தன.இரண்டாம் நாள் மூலமந்திர காயத்திரி ஹோமம், 108 திரவியங்களுடன் ஹோமம், இரண்டாம் கால ஹோமம், மூன்றாம் கால ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.மூன்றாம் நாள் அதிகாலை நான்காம் கால ஹோமம், தொடர்ந்து, மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

காலை, 9.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மகா அபிஷேகம், தசதரிசனம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் ஆகம முறைப்படி நடந்தது. மதியம் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், பொன்மணிவாசக அடிகளார், வராகி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X