பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள்

Added : பிப் 12, 2020
Advertisement

பாராட்டு விழாமதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் திருநகர் எல்.ஐ.சி., கிளை சார்பில் சிறந்த மாணவர் களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. ஆசிரியை இந்துமதி வரவேற்றார். கிளை மேலாளர் தினகர் விருது வழங்கினார். சீனியர் முகவர் ராஜவடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.விருது வழங்கும் விழாமதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் மக்கள் வறுமை ஒழிப்பு அறக்கட்டளை சார்பில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. நிறுவனர் ஸ்டாலின் தலைமை வகித்தார். 15 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை பொறுப்பாளர் சந்துரு, தலைமை ஆசிரியர் அய்யர் முன்னிலை வகித்தனர். விழாவை ஆசிரியர்கள் அமுதசுரபி, விஜயபிரபாகரன் ஒருங்கிணைத்தனர்.ஓவிய கண்காட்சிமதுரை சர்வேயர் காலனி மகாத்மா பள்ளியில் ஓவியக் கண்காட்சி தாளாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். பாராமவுன்ட் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் இயக்குனர் சிவகாமி ராமு திறந்து வைத்தார். ஓவிய ஒருங்கிணைப்பாளர்கள் நோபிள், பூவேந்திரன், முத்து கண்ணன், டெய்சி, வை ஜெயந்திமாலா, குறும்பட இயக்குனர் விக்டர், நடிகர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கருத்தரங்குமதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. 'மேனேஜ்மென்ட் எதிக்ஸ்' குறித்து பேராசிரியைகள் அனிதா, லட்சுமிஸ்ரீ பேசினர். உதவி பேராசிரியை திருவளர் செல்வி வரவேற்றார். உதவி பேராசிரியை சரண்யா நன்றி கூறினார்.தொழில் பயிற்சி முகாம்மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் தொழில் பயிற்சி முகாம் நடந்தது. பேப்பரில் கிண்ணம் செய்வது குறித்து மாணவி பெனாசீர் பயிற்சி அளித்தார். மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X