பொது செய்தி

தமிழ்நாடு

ஐஸ்வர்யம் டாக்டர் பாலகுருசாமி

Added : பிப் 12, 2020
Advertisement

மதுரையில் ரேடியோ சிட்டியின் மதுரை சிட்டிசன் விருது வழங்கும் விழாவில் மதுரையை சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தினமலர் ஊடக உதவி வழங்க, கரூர் வைஸ்யா வங்கி இணைந்து வழங்கியது. விருது பெற்றவர்கள் இங்கே அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.2014ல் ஒரு கிராமத்திற்கு மருத்துவ முகாம் சென்ற போது வறுமையில் மருத்துவம் பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த நோயாளியை பார்த்து, இவர் போன்றவர்களுக்கு உதவிட 'ஐஸ்வர்யம்' அறக்கட்டளையை நண்பர்களுடன் இணைந்து டாக்டர் பாலகுருசாமி ஆரம்பித்தார்.ஆதரவற்றோருக்கு ஆரோக்கிய ஐஸ்வர்யம் அள்ளி தரும் பாலகுருசாமி பேசுகிறார்... ''மனிதனுக்கு இறப்பு அமைதியாக இருக்க வேண்டும். வலியை தரக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம். இதை மனதில் கொண்டு டாக்டர் வெங்கடேஷ் உட்பட ஏழு நண்பர்கள் அறக்கட்டளையை உருவாக்கினோம்.ஆதரவற்ற நிலையில் நோயின் பிடியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு விளாச் சேரியில் உள்ள எங்கள் நேத்ராவதி வலி நிவாரண மையத்திற்கு அழைத்து வந்து இலவச சிகிச்சை, உணவு, மருந்து வழங்கி தொடர்ந்து கவனிக்கிறோம். இதுவரை 150க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சிலரை குடும்பத்துடன் சேர்த்தும் வைத்துள்ளோம்.தற்போது மையத்தில் 48 பேர் உள்ளனர். பெரிதாக நன்கொடை இல்லை என்றாலும் எங்கள் வருமானத்தில் சேவையை தொடர்கிறோம். இந்த விருது எங்களை கூடுதலாக சேவை செய்ய ஊக்கமளித்துள்ளது''என்றார்.www.aishwaryamtrust.org

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X