டெங்கு பரவுவதை தடுக்க விழிப்புணர்வு நாடகம்

Added : பிப் 12, 2020
Advertisement
 டெங்கு பரவுவதை தடுக்க விழிப்புணர்வு நாடகம்

புதுச்சேரி:பொது மக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு குறித்த விழிப்புணர்வு பணிகளை சுகாதாரத் துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக, தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தின் சார்பில், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை சாலை, வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம் ஆகிய இடங்களில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தை, துணை இயக்குனர்(பொது சுகாதாரம்) அல்லிராணி, உதவி இயக்குனர்(மலேரியா) கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஆசிரியர் கலைக் குழுவை சேர்ந்தவர்கள், டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணங்கள், பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X