பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளும், ஊழியர்களும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் எதிரில், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றுபட்ட அமைப்பின் கன்வீனர் சுப்ரமணியன், தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், தண்டபாணி, அரிதாஸ், தனசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 4ஜி சேவைகளை உடனடியாக துவக்க வேண்டும், பி.எஸ்.என்.எல்., கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனே வழங்க வேண்டும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆனந்தகண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-பிப்-202020:05:05 IST Report Abuse
Pasupathi Subbian அது மட்டுமல்ல எடுத்ததற்கெல்லாம் போராட்டம் , வேலை நிறுத்தம், எத்தனை தடவை மொபைல் சர்விஸ் பாதிக்கப்பட்டது. இதற்க்கு பயந்தே மாற்று கம்பெனிகள் கனக்சன் வாங்கினோம். கும்பலாக உட்கார்ந்து கூட்டாக கூடி தின்னும் ஊழியர்கள். இந்த லட்சணத்தில் போனஸ் , தொழில்சங்கம் . தேவையா.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
12-பிப்-202012:21:44 IST Report Abuse
Girija ஆடிய ஆட்டம் என்ன ? பால்ட் புகாருக்கு மூன்று மாதம் எடுத்து என்ன ? புது இணைப்புக்கு லஞ்சம் கேட்டது என்ன ? லைன் ப்ராபளம் என்றால் நேரம் கெட்ட நேரத்தில் வந்து அதிகாரம் செய்து பணம் வாங்கியது என்ன ? நீங்க எல்லோரும் இன்னும் வி ஆர் எஸ் இல் போகலையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X