தவறி விழுந்த இன்ஜினியர் பலி

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:பைக்கில் இருந்து தவறி விழுந்த இன்ஜினியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரி, ரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் பாலமுகேஷ்,22; பி.டெக்., பட்டதாரியான இவர் பிரெஞ்ச் படித்து வந்தார். சம்பவத்தன்று காலை பிரெஞ்ச் வகுப்பிற்கு பைக்கில் புறப்பட்டார். சோனாம்பாளையம் பொதுப்பணித்துறை வாட்டர் டேங்க் அருகே குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பாலமுகேஷ் பிரேக் போட்டார். அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X