வெடிகுண்டுடன் பதுங்கி இருந்த இரு வாலிபர்கள் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே வெடிகுண்டுடன் பதுங்கி இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தேங்காய்திட்டு துறைமுக சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள தனியார் பள்ளி அருகே பதுங்கி இருந்த இரு வாலிபர்கள், போலீசை கண்டு ஓட முயன்றனர்.சந்தேகம் கொண்ட போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைக்கை சோதனை செயதது நாட்டு வெடிகுண்டு இருந்தது. விசாரணையில், அவர்கள், உப்பளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள் (எ) பழனி, 21: துத்திப்பட்டை சேர்ந்த பிரதாப் (எ) வெற்றி, 19; என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.புதுச்சேரியில் ஏற்கனவே வெடிகுண்டு வீசி கொலைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாட்டு வெடிகுண்டுடன் இரு வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X