பொது செய்தி

இந்தியா

சிங்காரவேலர் நினைவு தினம்..,...,

Added : பிப் 12, 2020
Advertisement
 சிங்காரவேலர் நினைவு தினம்..,...,

புதுச்சேரி;சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், தியாகியும், தொழிற்சங்க தலைவருமான சிங்காரவேலர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதை முன்னிட்டு, கடலுார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன், இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் மாலை அணிவித்தனர்.தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவனர் மங்கையர்செல்வன், புதுச்சேரி மீனவ மக்கள் கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X