குடும்ப பிரச்னையில் டிரைவர் தற்கொலை | Dinamalar

குடும்ப பிரச்னையில் டிரைவர் தற்கொலை

Added : பிப் 12, 2020
Share

புதுச்சேரி:மனைவி குடும்பம் நடத்த வராததால் விரக்தியடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை அடுத்த புதுப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது ஆமீப் மகன் முகமது ஆசிப்,24; டிரைவர். இவரது மனைவி ஷாஜிதா,20; இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.குடிப்பழக்கம் உடைய முகமது ஆசிப் அவ்வப்போது குடித்துவிட்ட வந்து தனது தந்தை மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதன் காரணமாக, 10 நாட்களுக்கு முன் ஷாஜிதா, சென்னை பெரியபாளயத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வரவில்லை. முகமது ஆசிப் சென்று அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த முகமது ஆசிப் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார், முகமது ஆசிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X