அமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கு தேடப்பட்ட ரவுடி கோர்ட்டில் சரண்

Added : பிப் 12, 2020
Advertisement

பாகூர்:அமைச்சரின் ஆதரவாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி, பண்ருட்டி கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம் 34; அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளரான இவர், கடந்த 31ம் தேதி, வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கிருமாம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து, பிள்ளையார்குப்பம் அமுதல் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பிள்ளையார்குப்பம் ரவுடி சுபாஷை போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில் அவர் நேற்று கடலுார் மாவட்டம், பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார். கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி, சுபாஷை காவலில் எடுத்து விசாரிக்க கிருமாம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X