சொத்து கேட்ட மகன் அடித்து கொலை: பெற்றோர் கைது

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 சொத்து கேட்ட மகன் அடித்து கொலை:  பெற்றோர் கைது

புதுச்சேரி:சொத்து கேட்டு தகராறு செய்த மகனை, இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தை மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த வீராம்பட்டிணம், வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குமார், 70: தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இறால், மீன் மொத்த வியாபாரம் செய்வதுடன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.இவருக்கு ரஞ்சித்குமார், 40: செந்தில்குமார், 35 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் செந்தில்குமார், தந்தையின் மீன் வியாபார தொழிலில் பாதியை பார்த்துக்கொள்கிறார்.முதல் மகன் ரஞ்சித்குமார், பிரான்ஸ் குடியுரிமை உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது மனைவி அனிதாவுடன் பிரான்சில் வசித்து வந்தார். திருமணமாகி 10 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. பி.டெக்., படித்திருந்தும், பிரான்சில் சரியான வேலை அமையவில்லை,இந்நிலையில், கடந்த மாதம் புதுச்சேரி வந்த ரஞ்சித்குமார், தந்தை குமாரிடம், பிரான்சில் தனக்கு சரியான வேலை அமையாததால், நீங்கள் பார்த்து வரும் மீன் மொத்த வியாபார தொழில் மற்றும் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி கேட்டுள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.இதனிடையே, நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ரஞ்சித்குமார், தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். தட்டி கேட்ட தாய் அன்னக்கொடியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை குமார், வீட்டில் இருந்து ஐஸ் உடைக்கும் இரும்பு ராடால், ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளார். மயங்கி விழுந்த ரஞ்சித்குமாரின் கை மற்றும் கால்களை புடவையால் கட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ரஞ்சித்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.ஆத்திரத்தில் மகனை கொலை செய்துவிட்ட குமார், இரவு முழுவதும் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தார். காலையில் அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததை கூறிவிட்டு தலைமறைவானார்.அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனியஸ் எஸ்.பி., ராகுல் அல்வால் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார் தாயிடம் விசாரணை நடத்தினார். ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் குமார் போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அன்னக்கொடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-202012:58:06 IST Report Abuse
Bhaskaran பணம் என்ன வேண்டும் ஆனாலும் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
Nethiadi - Thiruvarur,இந்தியா
13-பிப்-202010:03:54 IST Report Abuse
Nethiadi வாய் திறக்காமல் இருப்பது என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X