வியாபாரத்தில் நஷ்டம் பெண் தற்கொலை | Dinamalar

வியாபாரத்தில் நஷ்டம் பெண் தற்கொலை

Added : பிப் 12, 2020
Share
வில்லியனுார்:பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் பிரதீப், 45; இவரது மனைவி விஜியலட்சுமி,39; இவர்களுக்கு பிலீப்,10; என்ற மகனும், நந்திதா,4; என்ற மகளும் உள்ளனர்.பிரதீப் தற்போது புதுச்சேரியில் உள்ள பைப் கடையில் வேலை செய்து வருவதால், குடும்பத்துடன், வில்லியனுார் சுந்தர மூர்த்தி

வில்லியனுார்:பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் பிரதீப், 45; இவரது மனைவி விஜியலட்சுமி,39; இவர்களுக்கு பிலீப்,10; என்ற மகனும், நந்திதா,4; என்ற மகளும் உள்ளனர்.பிரதீப் தற்போது புதுச்சேரியில் உள்ள பைப் கடையில் வேலை செய்து வருவதால், குடும்பத்துடன், வில்லியனுார் சுந்தர மூர்த்தி விநாயகபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில், விஜியலட்சுமி கோட்டைமேடு பகுதியில் நடத்தி வந்த பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதில் விரக்தியடைந்த விஜியலட்சுமி நேற்று காலை வீட்டி லேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X