முதல்வர் படம் அகற்றிய விவகாரம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், முதல்வர் படம் அகற்றப் பட்ட விவகாரத்தில், அ.தி.மு.க., வினர் எதிர்ப்பை தொடர்ந்து, மீண்டும் மாட்டப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெ.. படமும், தற்போதைய முதல்வர் பழனிசாமி படமும் இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி, உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், ஒன்றியத்திற்குட்பட்ட 9 கவுன்சிலர்கள் பதவிகளில், ஏழு பேர், தி.மு.க., கூட்டணியை சார்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டதால் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பை தி.மு.க., கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, பிப்.5., தேதி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு முன்பு, கூட்ட அரங்கில் மாட்டப்பட்டிருந்த அ.தி.மு.க., வை சேர்ந்த முதல்வர்களின் படங்கள் அகற்றப் பட்டன. இதை கவனித்த அ.தி.மு.க., வினர் மீண்டும் அந்தப் படங்களை கூட்ட அரங்கில் மாட்ட வேண்டும், தவறினால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனக் கூறினர்.

இப்பிரச்னையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, வைரலாக பரவியது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெ., படத்தையும், தற்போதைய முதல்வர் பழனிசாமி படத்தையும் கூட்டரங்கில் மீண்டும் மாட்டி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X